பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் தேவை – கர்தினால் மெல்கம்

318 0

பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் கொண்டு வரப்படுவதனை விரும்புகின்றேன் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயார் இல்லத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பலவந்தமான அடிப்படையில் மதமாற்றம் செய்யப்படுவதனை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டால் அதனை நான் வரவேற்கின்றேன். இந்த நிலைப்பாடு எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் எனவும் கூறியுள்ளார்.

கத்தோலிக்க பேராயர் சபையின் நிலைப்பாடு எனது நிலைப்பாட்டுக்கு முரணானதாக இருக்கலாம்.

சிங்கள மற்றும் கத்தோலிக்க மக்கள் நீண்ட காலமாக நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்து வருகின்றார்கள்.

சில அடிப்படைவாதிகள் இதற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர். இந்த அடிப்படைவாதிகள் கத்தோலிக்கர்கள் அல்ல.

எனவே, பலவந்த அடிப்படையில் மாத மாற்றம் செய்யப்படுவதனை தடுக்க சட்டமொன்று கொண்டு வரப்படுவதனை தனிப்பட்ட ரீதியில் நான் எதிர்க்கவில்லை என கர்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்