வடக்கு மகாணத்தில் 2016 க.பொ.த சாதாரணதர பெறுபேற்றின் படி 256 பேருக்கு 9 A சித்தி

417 0
வட மாகாணத்தில் இருந்து கடந்த ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியடைந்துள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வட மாகாண  கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,
இலங்கையில் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற க.பொ.த சாதரண தரப் பரீட்சையில் வட மாகாணத்தில் இருந்து பரீட்சைக்குத் தோற்றிய  இப் மாணவர்களில் 256 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ தர சித்தியடைந்துள்ளனர்.  இவ்வாறு இவர்கள்ம ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருக்கும் அதேநேரம் 500ற்கும் மேற்பட்ட மாணவர்கள் 8 பாடங்களில் ஏ தரச் சித்தியினைப் பெற்றுள்ளனர்.
இதன் பிரகாரம் 9 பாடங்களிலும் ஏ தரச் சித்திய மாணவர்களாக வலய ரீதியில் கணிக்கப்பட்ட வேளையிலர யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 110 மாணவர்களும் , வடமராட்சி கல்வி வலயத்தினிலர 50 மாணவர்களும் , வவுனியா தெற்கு வலயத்தில் 34 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். அதேபோன்று வலிகாமம் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் 19 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தியை பெற்றுள்ளனர்.
இதேவேளை மன்னார் கல்வி வலயத்தினில் 18 மாணவர்களும் , தென்மராட்சி கல்வி வலயத்தினில் 12 மாணவர்களும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களில் தலா 7 மாணவர்களும் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதேவேளை ஏனைய நான்கு வலயங்களிலும் 9 பாடங்களிலும் ஏ சித்திகள் இல்லாதபோதிலும் 8 பாடங்களில் ஏ சித்தி பெற்று அந்த வலயங்களும் இம் முறை ஓர் சிறப்பான இடத்தினைப் பெற்றுள்ளனர். இதுவரை கிடைத்த தகவல்களின் பிரகாரம் 8 பாடங்களில் ஏ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை    ஆயிரத்து 500ஐ தாண்டியுள்ளது.
இவ்வாறு இச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களிற்கு மாகாணத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும். இந்த பெறுபேற்று வீதம் மேலும் அதிகரிக்க பாடுபடுவோம். என்றார்.