ரஜரட்ட ரெஜினு கடுகதி ரயில் மோதி கார் சேதம்!

153 0

பெலியத்தவிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த ரஜரட்ட ரெஜினு கடுகதி ரயில் மோதியதில் கார் ஒன்று சேதமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வஸ்கடுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.