மூத்த சினிமா, நாடக மற்றும் தொலைக்காட்சி நடிகர் சுமிந்த சிறிசேன தனது 75 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை (04) காலை காலமானார்.
கம்பஹாவிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமானதாக குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிசேன பல வகைகளில் முதன்மையாக முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அத்துடன், பல விருது விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.

