வெல்லம்பிட்டி, கடுவலை, மருதானை, முகத்துவாரம் மற்றும் பேலியகொட ஆகிய பொலிஸ் நிலையங்களின் செயற்பாடுகள் அதிருப்தியளிப்பதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.
நிறைவடைந்த 09 மாத காலப்பகுதிகளில் இரசாயன பகுப்பாய்வுக்காக பொலிஸார் சமர்ப்பித்த 10,491 போதைப்பொருள் மாதிரிகளில் 1471 மாதிரிகள் போதைப்பொருட்கள் அல்ல என்றும் நீதியமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

