இஸ்ரேலுக்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்த வேண்டும்

130 0

இஸ்ரேல் பலஸ்தீனில் மேற்காெண்டுவரும் மனிதாபிமானமற்ற செயலை கண்டிக்கும் வகையில் இலங்கையில் இருந்து தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பிர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (01)  விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

திலான் பெரேரா பலஸ்தீன் இலங்கை நட்புறவு சங்கத்தின் சா்வையை கழுத்தில் அணிந்த நிலையில் சபைக்கு வந்தே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இஸ்ரேல் மனிதாபிமானமற்ற முறையில் பலஸ்தீனில் செயற்பட்டு வருகிறது. சிறுவர்கள், பெண்கள் என அனைவரையும் கொலை செய்து வருகிறது. குண்டுகளை வீசி பலஸ்தீன் மக்களின் வீடுகளை தரைமட்டமாக்கி வருகிறது. இந்த செயலை எங்களுக்கு அனுமதிக்க முடியாது.

பலஸ்தீன் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என நாங்கள் இந்த சபையில் விவாதித்திருக்கிறோம்.  அண்மையிலும் இந்த தாக்குதலை நிறுத்தி அங்கு இரு தரப்பினரும்  அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என நாங்கள் பிரேரணை நிறைவேற்றி இருந்தோம்.

அதனால் இஸ்ரேல் பலஸ்தீனில் மேற்கொண்டுவரும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  எமது நாட்டில் இருந்து இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை அங்கு யுத்தம் நிறுத்தப்படும் வரை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஸ்ரீமா பண்டார நாயக்க பிரதமராக இருந்தபோது அன்று இஸ்ரேலுடனான இராஜதந்திர நடவடிக்கையை துண்டித்திருந்தார். தற்போதும் பல நாடுகள் இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றன.

எனவே இந்த பிரச்சினையை முஸ்லிம் பிரச்சினையாக பார்க்கக்கூடாது. இது மனிதாபிமானமற்ற பிரச்சினை. 6 நிமிடங்களுக்கு ஒரு குழந்தையை கொலை செய்கிறரர்கள். 10 நிமிடங்களுக்கு ஒரு பெண்ணை  கொலை செய்கிறார்கள். காஸாவில் வைத்தியசாலைகள், அகதி முகாங்கள் பாடசாலைகள் மீது குண்டு தாக்குதல் மேற்கொள்கிறார்கள்.

அதனால் இஸ்ரேலின் இந்த மிலேச்சத்தனமான மனிதாபிமானமற்ற நடவடிக்கைக்கு எதிராக முழு பாராளுமன்றமும் எழுந்து நின்று இதனை நிறுத்த குரல் கொடுக்க வேண்டும். அதற்காக பணத்தை பார்க்காமல் மனிதாபிமானத்தை பார்த்து இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதை நிறுத்த நடவடிக்கை எடுப்போம்.

இல்லாவிட்டால் நாங்களும் மனிதாபிமானமற்றவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்படுவோம். பலஸ்தீன் மக்களின் போராட்டத்துடன் எமது பாராளுமன்றமும் இருக்கிறது என்ற தகவலை தெரிவிக்க வேண்டும் என்ற பிரேரணையை முன்வைக்கிறேன் என்றார்.

இதன்போது எழுந்த ஆளும் கட்சி உறுப்பினர் சீ.பி ரத்நாயக்க குறிப்பிடுகையில், ,இஸ்ரேல் பலஸ்தீன் யுத்தம் தொடர்பாக திலான் பெரேரா எம்.பி. பிரேரணை ஒன்றை முன்வைத்தார் அதற்கு ஆதரவளித்தவனாக, இந்த யுத்தம் மேலும் தொடர்ந்தால் 3ஆம் உலக யுகத்தம் இடம்பெறும் நிலைக்கு செல்லும். எமது நாட்டிலும் யுத்தம் இடம்பெற்றது. அப்போது மனித உரிமை அமைப்புகள் பாரியளவில் தலையிட்டுவந்தன. எமது அதிகாரிகள் பலருக்கு சர்வதேச நாடுகளுக்கு செல்வதற்கு தடைகளை ஏற்படுத்தினார்கள்.

அத்துடன் முறைகேடாக அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக செயற்படும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு எதிராக செயற்படு, அங்கு அமைதி ஏற்பட நாங்கள் முழு பாராளுமன்றமாக இணைந்து செயற்பட வேண்டும். அதற்கா திலான் பெரேரா கொண்டுவந்த பிரேரணையை நான் தனிப்பட்ட ரீதியில்  வழிமொழிகிறேன் என்றார்.