வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டவர் கைது

113 0

கம்பஹா பிரதேசத்தில் வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கம்பஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய நபராவார்.

இவர் வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதாக கூறி 47 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.