இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியமும் கவலை வெளியிட்டுள்ளது.
அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் படி சர்வதேச தராதரங்களிற்கு ஏற்ப அதிகாரிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தினை மாற்றவேண்டும் அதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும் என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது

