பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் இர்ஃபானுக்கு ஒருவருட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆட்டநிர்ணய சதி தொடர்பான முகவர்கள் இரண்டு தடவைகள் அவரை அணுகியுள்ளனர்.
குறித்த இரண்டு சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் அவர் கிரிக்கட் சபையில் முறையிட தவறியுள்ளார்.
இதனை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கட் சபை இந்த தடையை விதித்துள்ளது.
அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால், தடைக்காலம் 6 மாதங்களாக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

