ஈராக் தலைநகர் பக்தாத்தில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலியாகினர்.
மேலும் 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
அங்குள்ள காவற்துறை சோதனை சாவடி ஒன்றில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இன்னும் எந்த குழுவும் உரிமை கோரவில்லை.
எனினும் அண்மைக்காலமாக அங்கு ஐ.எஸ். தீவிரவாதிகளே தாக்குதல்களை நடத்துகின்ற நிலையில், இந்த தாக்குதலையும் அவர்களே மேற்கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

