சமல் ராஜபக்ச விற்கு காத்திருக்கும் அமைச்சர்பதவி

485 0

----------------------------------22குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள்சபாநாயகருமான சமல் ராஜபக்சவுக்கு அமைச்சு பதவி ஒன்றை வழங்க ஜனாதிபதிவிருப்பத்துடனேயே இருக்கிறார்.எனினும் அதற்கு சமல் ராஜபக்ச விருப்பம் வெளியிடவேண்டும் என்று அமைச்சர் மஹிந்தஅமரவீர தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அபிவிருத்திக்குழு தலைவர் பதவியில் இருந்து சமல் ராஜபக்சவை நீக்கிவிட்டு, அமரவீர ஜனாதிபதியினால் இரண்டு நாட்களுக்கு முன்னர்நியமிக்கப்பட்டார்.இந்தநிலையில், சமல் ராஜபக்ச அமைச்சரானால் எந்தநேரத்திலும் இந்தஅபிவிருத்திக்குழு தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க தயார் என்று அமரவீர ஊடகம்ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

சமல் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான கூட்டங்களில் பங்கேற்கின்ற போதும்மஹிந்த தரப்பு நாடாளுமன்ற குழுவில் அமைதியானவராக கருதப்படுகிறார்.