சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட உணவு தவிர்ப்பில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் சிரில் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் குருதி மற்றும் சிறுநீர் பரிசோதனையின் பின்னர் மேலதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு மருந்து வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு சேலைன் ஏற்றப்படுவதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
தொடர்ந்தும் 8வது நாளாக உணவுத்தவிர்ப்பை மேற்கொண்ட நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாகவே அவர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
தமக்கு பிணை வழங்குமாறு கோரியே அவர் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

