சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல்

316 0

சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சவுதிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்திற்கு அமைவாக இந்த செயல்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வழங்கப்பட்டுள்ள இந்த காலத்தில் அனுமதியின்றி அந்த நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் சட்டரீதியாக அந் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தூதரத்திற்கு வரும் பிரஜைகள் தம்மிடமுள்ள கடவுச்சீட்டு அல்லது அதன் இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டையின் இலக்கம் இருந்தால் அது வசதியாக இருக்கும் என அந்த காரியாலயம் தெரிவித்துள்ளது.

பொது மன்னிப்பு காலத்தின் ஊடாக வழங்கப்படும் சலுகைக்கு அமைய தகுதி இருந்தால் மாத்திரம் தற்காலிக கடவுச்சீட்டு வழங்கப்படும் என அந்த காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் குற்றத்திற்காக பாதுகாப்பு பிரிவால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நபருக்கு பொது மன்னிப்பு காலத்தில் அந் நாட்டில் இருந்து வெளியேற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.