ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் வழி முறைகள் உள்ளிட்ட தற்போதைய நிலமைகள் தொடர்பில் சுவிஸ் தூதுவருடன் நேரில் பேச்சுக்களில் ஈடுபட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராயா தெரிவித்தார்.இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் சுவிஸ் நாட்டுத் தூதுவரிற்கும் இடையில் ஓர் விசேட சந்திப்பு யாழ் நகரில் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் வழி முறைகள் உள்ளிட்ட தற்போதைய நலமைகள் தொடர்பிலேயே முக்கிய கவணம் செலுத்தப்பட்டது.
இதே நேரம் ஐ.நா விடயங்களுடன் குறித்த சந்திப்பின்போது வடக்கு மக்களின் நிலமைகள் புதிய அரசியல் யாப்பின் தற்போதைய நிலவரம் , நிலவிடுவிப்புத் தொடர்பான நிலமைகள் மற்றும் வட பகுதி மக்களின் தற்போதைய நிலவரம் போன்ற வற்றிலும் கவனம் ணெலுத்தப்பட்டது. குறித்த விடயங்கள் தொடர்பாக தூதுவரிடம் விரிவாக கூறியுள்ளோம்.
குறித்த சந்திப்பானது இரவு 8 மணியில் இருந்து 10 மணிவரையில் இடம்பெற்றது. சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராயா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவான் , சி.சிறிதரன் , இ.சாள்ஸ் நிர்மலநாதன் , சாந்தி சிறீஸ்கந்தராயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். என்றார்.-

