கொழும்பின் துறைமுகநகரத்தை ஊக்குவிப்பதற்காக சீனாவிடமிருந்து பணம் பெற்றாரா டேவிட் கமரூன்

34 0

இலங்கையில் சீனாவின் துறைமுகநகரத்தை ஊக்குவிப்பதற்காக பிரிட்டனின் புதிய வெளிவிவகார அமைச்சர் டேவிட்கமரூன் சீனாவிடமிருந்து பணம் பெற்றாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

சீனாவின் துறைமுகநகரத்தை ( கொழும்பு) புகழ்ந்து டேவிட் கமரூன் கருத்து தெரிவிப்பதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளதை தொடர்ந்தே பிரிட்டனின் புதிய வெளிவிவகார அமைச்சர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இரண்டுமாதங்களுக்கு முந்தைய வீடியோவில் துபாயில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் கொழும்பின் துறைமுக நகரம் குறித்த தவறான கருத்துக்களை திருத்தவிரும்புவதாக தெரிவிப்பதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் சீனாவின் அறிக்கையொன்றையும் அவர் வாசித்துக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் கொழும்புதுறைமுகநகரத்திற்கு ஆதரவாக பணத்தை பெற்றுக்கொண்டு ஆற்றிய உரைகள் தொடர்பில் டேவிட்கமரூன் தற்போது அழுத்தங்களிற்குள்ளாகியுள்ளார்.

சீனாவின் அரசநிறுவனமான சீனாவின் ஹார்பர் என்ஜினியரிங் நிறுவனம் கொழும்புதுறைமுகநகரத்தை உருவாக்கிவருகின்றது.

டேவிட்கமரூன் தனது உரைக்கும் சீனாவின் நிறுவனத்திற்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளார்.அவரை இலங்கையின் கேபிஜிஎம் நிறுவனமே அழைத்துள்ளதாக  அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை டேவிட் கமரூனிற்கு பணம் வழங்கியது சீன நிறுவனமா அல்லது இலங்கையா என வியாழக்கிழமை  பிரிட்டனின் நிழல் அமைச்சர் பட்மக்டவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள அமைச்சரவை அமைச்சர் ஜோன் க்ளென் இது தான் பதிலளிக்கவேண்டிய விடயமில்லை ஆனால் டேவிட் கமரூன் தொடர்புடைய நடைமுறைகளை பின்பற்றியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட வீடியோ டேவிட்கமரூன் சீனாநிறுவனத்தின் பிடல்யூசி நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி  புகழ்ந்து உரையாற்றுவதை காண்பித்துள்ளது.

பிடபில்யூசி அறிக்கை இந்த திட்டத்தினால் 200,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியும் என்பதை காண்பிக்கின்றது இலங்கையின் உள்நாட்டு உற்பத்திக்கு அதனால் பெரும் நன்மை ஏற்படலாம் என டேவிட் கமரூன் துபாயில் தெரிவித்துள்ளார்.