100 கோடி ரூபா நட்டஈடு கோரி ஷானி அபேசேகர வழக்குத் தாக்கல்!

34 0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, தன்னைப் பொய்க் குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றத்தை முறையற்ற வகையில் வழிநடத்தி விளக்கமறியலில் வைத்ததன் மூலம் தனது சுயமரியாதைக்கு ஏற்பட்ட  இழுக்குக்காக 100 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு குற்றப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் ஊடாக, கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாமின் கொலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட  துப்பாக்கிகள்  குறித்து கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தமக்கு எதிராக தீங்கிழைக்கும் நோக்கத்துடனும் பழிவாங்கும் நோக்கத்துடனும் விசாரணைகளை மேற்கொண்டதாக  ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.