முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருகின்றார்கள்- எம்.கணேசராஜா(காணொளி)

257 0

முஸ்லிம் பெண்கள் ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமான முறையில் செயற்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று காலை மட்டக்களப்பு தேவைநாடும் மகளிர் அமைப்பு ஏற்பாடுசெய்த மாற்றத்திற்காய் துணிந்திரு என்னும் தலைப்பிலான மகளிர் விழிப்பூட்டும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் தேவைநாடும் மகளிர் அமைப்பின் சட்ட ஆலோசகர் கே.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மற்றும் விசேட விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் அசீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பெண்கள் தொடர்பிலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது.

அத்துடன் பின்தங்கிய நிலையில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு இதன்போது வாழ்வாதார உதவிகளும் வழங்கிவைக்கப்பட்டன.

நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா

முஸ்லிம் சமூதாயத்தில் துணிச்சல்மிக்க ஒரு பெண் சமூதாயம் உருவாகியுள்ளதையிட்டு தாங்கள் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகம் கல்வி உட்பட பல்வேறு துறைகளிலும் அனைத்து விடயங்களிலும் முன்னோக்கிச்சென்றுகொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.