முள்ளிக்குளம் மக்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை

277 0

முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ந்து 6 ஆவது நாளாகவும் நேற்று முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

எனினும் குறித்த மக்களை நேற்று மாலை நேரில் சென்று சந்தித்த மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ள மக்களின் காணியை நேரடியாக சென்று பார்வையிட்டார்.

கடற்படையினரினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மக்களின் காணியை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வந்தனைக்கூறிய ஆயர் ஜோசப் சிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உள்ளிட் அருட்தந்தையர்கள் அடங்கிய குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன் போது கடற்படை முகாமுக்குள் சென்று மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அதி வந்தனைக்கூறிய ஆயர் ஜோசப் சிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை உற்பட அருட்தந்தையர்கள் அடங்கிய குழுவினர் நேரடியாக சென்று பார்வையிட்ட சம்பவத்தை புகைப்படம் எடுத்த மன்னார் பிராந்தி ஊடகயியலாளர் ஒருவரின் புகைப்பட கருவியில் இருந்த புகைப்படங்களை கடற்படையினர் பலவந்தமாக புகைப்பட கருவியை அபகரித்து குறித்த கருவியில் உள்ள புகைப்படங்களை அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 6 தினங்களுக்கு மேலாக முள்ளிக்குளம் மக்கள் தமது நில மீட்புக்காக போராட்டங்களை பகல் இரவு பாராது முன்னெடுத்து வருகின்ற போதும் அந்த மக்களின் உரிமை போராட்டத்த்திற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

குறித்த மக்களின் போராட்டம் 7 ஆவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.