எச்1 என்1 குறித்து அச்சப்படத் தேவையில்லை – சுகாதார அமைச்சு

220 0

இன்புளூவன்சா எச்1என்1 வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அந்த நொய் குறித்து வீணாக அச்சமடைய தேவையில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் சில பிரதேசங்களில் எச்.1என்.1 வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களிலும், மே முதல் ஜூலை மாதங்களிலும் அந்த நோய் பரவுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி சுகாதார அமைச்சின் ஆலோசனைப்படி நாட்டின் பல பிரதேசங்களில் எச்.1என்.1 வைரஸ் சம்பந்தமாக மக்களை தெளிவூட்டுவதற்காக வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வேலைத்திட்டங்களை விரைவாக ஆரம்பிக்குமாறு சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.