மாலபே தனியார் கல்லூரி தொடர்பில் இறுதி தீர்மானமொன்றை எடுக்க அரசாங்கம் தவறுமாயின், எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் பணிப் புறக்கணிப்பபை முன்னெடுக்க உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் பணிப் புறக்கணிப்புக்கு அரச மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 63 தொழிற்சங்கங்கள் ஆதரவளிப்பதாக மருத்து சங்கத்தின் பிரதிநிதி நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிப் புறக்கணிப்பை எவ்வாறு முன்னெடுப்பது குறித்து தற்போது கலந்துரையாடப்படுகிறது.
இந்தப் பணிப் புறக்கணிப்புக்கு ஆதரவளிப்பது குறித்து மேலுல் சில தொழிற்சங்கங்கள், தமது பிரிநிதிகளுடன் கலந்துரையாடி வருவதாக அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

