நாடளாவிய ரீதியான டெங்கு ஒழிப்பு இன்று முதல்

210 0

நாடளாவிய ரீதியான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று முதல் எதிர்வரும் நான்காம் திகதி வரையில் மேற்கொள்ளப்படவுள்ளன.

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

டெங்குநோயைப் பரப்பும் நுளம்புகள் உருவாகுவதற்கு ஏதுவாக அமைந்துள்ள சூழலை சுத்தம் செய்து, டெங்கு நுளம்புகளை அழிப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இதற்காக தேசிய அளவில் சுமார் 3000 குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் டெங்கு நோயினால் 40 பேர் உயிரிழந்ததுடன், 24 ஆயிரத்து 562 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக காழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கல்முனை, திருகோணமலை, ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் அதிக டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன.