நுவரெலிய சென்.கிளயார் தோட்ட டெவோன் பிரிவுக் குடியிருப்பில் தீ(காணொளி)

387 0

நுவரெலிய சென்.கிளயார் தோட்ட டெவோன் பிரிவுக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 17பேர் அயலவர்கள் வீட்டில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பத்தனை சென்.கிளயார் டெவோன் பிரிவுக் குடியிருப்பில் இன்று அதிகாலை 5 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மூன்று வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் ஒரு வீடு முற்றாகவும், ஏனைய இரண்டு வீடுகள் பகுதியளவிலும் எரிந்துள்ளது.

குறித்த வீடுகளில் குடியிருந்த 03 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் தற்காலிகமாக அயலவர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை எனவும், எனினும் அயலவர்கள் ஓடி வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் போன்ற பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை சம்பவம் தொடர்பாக பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.