சர்ச்சைக்குறிய இராமநாதன் கண்ணனின் நியமனம் குறித்த முக்கிய கூட்டம்

330 0

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான இராமநாதன் கண்ணனை, மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை, அதிகாரமற்ற பரிந்துரை என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அவ்வாறிருந்த போதிலும் இராமநாதன் கண்ணனின் நியமனத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமை குறித்து நீதிச் சேவைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளதுடன், அது தொடர்பில் வரும் ஏப்ரல் மாதம் 01ம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் ஒன்று கூடி தீர்மானம் ஒன்றை எடுப்பதற்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இராமநாதன் கண்ணன், மேல் நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்பட்டமை சம்பந்தமாக, அந்த நியமனத்தின் போது பின்பற்றப்பட்ட தவறான நடைமுறைகள், சட்டத்தரணிகள் சங்கம் என்ற பெயரை ஒரு சிலரின் தேவைக்காக பயன்படுத்தியமை, எந்தவித முறையான நடைமுறையுமின்றி வழங்கப்பட்ட அந்த நியமனம் அரசியல் தேவைகள் மற்றும் வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு இடமளிக்கும் போன்ற காரணங்களை நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப்பின்னணியில் இராமநாதன் கண்ணனை, மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை சட்டத்தின் முன் மேலும் செல்லுபடியற்ற மற்றும் வலுவற்ற பரிந்துரை என்று 2013.02.27 ம் திகதியன்று கூடிய நீதிச் சேவைகள் ஆணைக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த தீர்மானம் அன்றைய தினமே ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆரம்பம் முதலே இராமநாதன் கண்ணனின் நியமனம் சட்டத்தின் முன் செல்லுபடியற்ற மற்றும் வலுவற்றது என நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் கூறப்பட்டு ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இராமநாதன் கண்ணன் தொடர்ந்து மேல் நீதிமன்ற நீதிபதியாக சேவையாற்றுவதானது, சட்ட ரீதியற்றது.

அதனால் அந்த நியமனம் ஆரம்பம் முதலே சட்ட ரீதியற்றது மற்றும் அதிகாரமற்ற நியமனம் என்று கூறி, இராமநாதன் கண்ணனின் நியமனத்திற்காக ஜனாதிபதியினால் கையொப்பமிடப்பட்ட பத்திரத்தை மீண்டும் பெற்று மேல் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து நீக்குவதை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராமநாதன் கண்ணனை மேல் நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து நீக்காமல் தொடர்ந்து சேவையாற்ற சந்தர்ப்பம் வழங்குவதானது, சட்டத்துக்கு மாறானது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என்பது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்பதுடன், அது நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மைக்கு மிகப் பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும்.

ஆகவே இது தொடர்பில் எடுக்க வேண்டுய நடைமுறைகள் சம்பந்தமாக தீர்மானிப்பதற்காக நாட்டிலுள்ள அனைத்து கீழ்மட்ட நீதிதமன்றங்களின் நீதிபதிகளையும் ஒன்றுதிரட்டி நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் விஷேட பொதுக் கூட்டம் ஒ்னறை நடத்துவதற்கு 2017.03.23 அன்றைய தினம் இடம்பெற்ற நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.