கல்கிஸ்ஸயில் தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்

380 0

கல்கிஸை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் எரிகாயங்கள் ஏற்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வீடொன்றில் பணிப்பெண்ணாக கடமையாற்றி வந்த பெண்ணொருவர் குளியலறையில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார். இதனையடுத்து களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.

மடொல்சீம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பணிப்பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது குளியலறையில் இருந்து மண்ணெண்ணெய் போத்தல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.