சந்தேகத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் உயிரிழப்பு!

132 0

சட்டவிரோத மதுபானத்துடன் தொடங்கொடை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்டவர்   உயிரிழந்துள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

தொடங்கொடை வெனிபெல்கட்டிய பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதையடுத்து பொலிஸார் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.