புதிதாக கொண்டுவரப்படவுள்ள மீனவ சட்டம் நிறுத்தப்பட வேண்டும்

207 0

புதிதாக கொண்டுவரப்படவுள்ள மீனவ சட்டம் நிறுத்தப்பட வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் ஹேமன் குமார தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில். அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் மீனவர்கள் மத்தியில் கொண்டுவரப்பட்டு அவர்களின் கருத்துக்கள் உள் வாங்க பட வேண்டும்.இந்தச் சட்டத்தின் ஊடாக மீனவர்கள் தொடர்பான  அனைத்து விடயங்களும் பணிப்பாளரின் அதிகாரத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இது மிகவும் ஆபத்தானது.

அதனை நிறை வேற்றுவதாக இருந்தால் மீனவர்கள் மத்தியில் கருத்து பரிமாற்றத்துக்கு உட்படுத்தி  பல விடயங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும்.

இதேவேளை அடுத்த வருட பட்ஜெட்டில் மீனவர்களுக்கான எந்த ஒரு திட்டமும் உள்வாங்கப்படவில்லை எனவும் இது தொடர்பாக அனைவரும் பேச வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.