வரவுசெலவு திட்ட யோசனைகளை முன்கூட்டியே கசிய விட்டது யார் ?

383 0

வரவு செலவுதிட்ட யோசனைகள் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படுவதற்கு முன்னர் கசியவிடயப்பட்டதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

வரவு செலவுதிட்ட யோசனைகள் நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படுவதற்கு  முன்கூட்டியே கசியவிட்டது யார் ?

நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்தவேளை எனக்கு இது குறித்த தகவல் கிடைத்தது.

நான் அதனை பார்க்கவில்லை.

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இது குறித்து வினவியவேளை அவர் அரசாங்க அச்சுக்கூட்டுத்தாபனத்திலிருந்து வருவதாக அவர் தெரிவித்தார் என ஹர்ச டிசில்வா தெரிவித்துள்ளார்.