திங்கள் கூடுகிறது சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு

126 0

இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவானது திங்கட்கிழமை (13) கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் சபை அமர்வுகளில் தொடர்ச்சியாக நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகள் தொடர்பில் சிறப்புரிமைகளை பயன்படுத்தி கருத்துக்களை வெளிப்படுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

மேலும் இந்த விடயம் சம்பந்தமாக நிறைவேற்றுக்குழுவில் தொடர்ச்சியாக கலந்துரையாடப்படவுள்ளதோடு, உறுப்பினர்கள் சிறப்புரிமைகளை பயன்படுத்தும் அதேநேரம், நீதித்துறையின் சுயாதீனத்தினை பாதுகாப்பு தொடர்பிலும் எவ்விமாக விடயங்களை கையாள முடியும் என்பது தொடபிலான ஒரு மூலோபாயத்தைக் கண்டறிவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.