பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் 42 வயதான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான சந்தேகநபரிடமிருந்து 12 கிராம் ஐஸ் போதைப்பொருளும் ஒரு தொகை பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் வெல்லம்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜானக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்து பணம் பறிக்க முயற்சித்த குற்றச்சாட்டிலேயே இவர் பொலிஸாரினால் கைதானமை குறிப்பிடத்தக்கது.

