வாக்காளர் பதிவில் வீழ்ச்சி

316 0

புதிய வாக்காளர்களின் பதிவுகள் ஐம்பது சதவீத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் தேர்தல் தொடர்பில் மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளது.

இலங்கையின் நாடாளுமன்றம் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையீனம் அண்மைய வாக்காளர் கணக்கெடுப்புக்கள் மூலம் அறிய முடிந்துள்ளதாக மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.