யேர்மனி நாட்டு பெண் பிணைக் கைதி சடலமாக மீட்பு??

157 0

ஹமாஸ் போராளிகளால் பிணை கைதியாக பிடித்துச்செல்லப்பட்ட ஜெர்மன் நாட்டு பெண், சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 7ஆம் திகதி, இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள், திறந்தவெளி இசை கச்சேரியில் கலந்துகொண்ட யேர்மன் நாட்டு பெண் டாட்டூ கலைஞர் ஷனி லெளக்கை பிணை கைதியாக பிடித்தனர்.

ஹமாஸ் போராளிகள் சென்ற பிக்-அப் டிரக்-கில் ஷனி லெளக் ஆடைகளின்றி கிடப்பது போன்ற காணொளி இணையத்தில் வைரல் ஆனது.

ஷனி லெளக்-கின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, காஸாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவரது தாயார். மகளை மீட்டுத்தருமாறும் காணொளியை வெளியிட்டிருந்தார். இதற்கிடையே ஷனி லெளக்கை ஹமாஸ் போராளிகள் சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

ஹமாஸால் கடத்திச் செல்லப்பட்ட யேர்மன்-இஸ்ரேலிய ஷானி லூக் தலை துண்டிக்கப்பட்டதற்கு அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் கடும் கண்டனத்தை வெளியிட்டார். இது ஹமாஸ் தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைத்து காட்டுமிராண்டித்தனத்தையும் காட்டுகிறது என்றார். இப்படுகொலையை ஹமாஸ் பொறுப்பேற்க வேண்டும் என்று ஷோல்ஸ் கேட்டுக்கொண்டார்.