இன்று முதல் ஆறு தோட்­டங்­களில் வேலை­நி­றுத்த போராட்டம்

207 0

இன்று முதல் கண்டி எயார்பார்க் தோட்டம் உள்­ளிட்ட ஆறு தோட்­டங்­களில் திட்­ட­மிட்­டப்­படி   வேலை­நி­றுத்த போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மென  இலங்கை செங்­கொடிச் சங்­கத்தின் செய­லாளர் மேனகா தெரி­வித்தார்.

நாம் அரச பெருந்­தோட்­ட­யாக்­கத்­துக்கு கொடுத்த மூன்று வார காலக்­கெடு முடிந்­துள்ள நிலையில் இது­வ­ரை­யிலும் எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தை­களும் இடம்­பெ­றா­ததால் ஆர்ப்­பாட்­டத்­துக்கு செல்­ல­வேண்டி ஏற்­பட்­ட­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நாட்டின் பொரு­ளா­தார துறையின் சக்­தி­யாக விளங்கும் பெருந்­தோட்­டத்­துறை தற்­போது நஷ்­டத்தில் இயங்­கு­வ­தாக தெரி­வித்து அரச பெருந்­தோட்­டக்­கா­ணி­களை தனி­யா­ருக்கு வழங்க எடுக்­கப்­பட்­டுள்ள தீர்­மா­ன­மா­னது தொழி­லா­ளர்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­யாகும்.

அத்­துடன் தற்­போது குறை­வான வேலை நாட்­களே குறித்த தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்ற நிலையில்  இவ்­வாறு தோட்­டக்­கா­ணி­களை தனியார் மயப்­ப­டுத்­து­வதின் ஊடாக அவர்­க­ள் நிரந்­த­ர­மாக தொழில்­வாய்ப்­புக்­களை இழக்க வேண்­டிய நிலை­யேற்­படும். ஆகவே நஷ்­டத்தில் பெருந்­தோட்­டத்­துறை இயங்­கு­வ­தாக இருந்தால் குறித்த காணி­களில் பரம்­ப­ரை­யாக தொழில் செய்த தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கே வழங்­கப்­ப­டு­வதால் அவர்­க­ளது வாழ்­வா­தா­ரத்தில் ஏற்­படும் பாதிப்­புக்குள் குறைக்­கப்­படும்.

இவ்­வா­றான தங்­க­ளது அடிப்­படை பிரச்­சி­னை­களை முன்­னி­லைப்­ப­டுத்­தியும் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­தி­யான செயற்­பாட்­டுக்கு எதிர்ப்பு தெரி­வித்­துமே  கண்டி உன்­னஸ்­கி­ரிய எயாபார்க் தொழி­லா­ளர்­க­ளுடன் இணைந்து கடந்த மாதம் தொடர்ச்­சி­யான போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம்.

இவ்­வி­ட­யத்தில் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்கள் எதிர்­நோக்கும் அடிப்­படை பிரச்­சி­னைக­ளுக்­கான தீர்­வினை பெற்­றுத்­த­ரு­வ­தற்கு அரச பெருந்­தோட்­ட­யாக்கம் எம் ­முடன் பேச்­சு­வார்த்­தை­யொன்­றினை ஏற்­பாடு செய்­வ­தாக அறி­வித்­தி­ருந்­த­துடன் நிலவும் தொழி­லாளர் பிரச்­சி­னைகள் குறித்து ஒரு­வா­ர­கா­லத்­துக்குள் அறி­விக்­கு­மாறும் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. இத­ன­டிப்­ப­டையில் தொழி­லா­ளர்­களின் போராட்டம் தற்­கா­லி­க­மாக கைவி­டப்­பட்­டி­ருந்­தது.

இருப்­பினும் அர­சாங்­கத்­துக்கு வழங்­கப்­பட்ட மூன்று வார கால அவ­காசம் கடந்த 24 ஆம் திகதி நிறை­வுற்­றி­ருக்கும் நிலை­யிலும் குறித்த தொழி­லாளர் பிரச்­சி­னைக்கு எவ்­வித தீர்­வி­னையும் இது­வ­ரையில் அர­சாங்கம் பெற்­றுக்­கொ­டுக்­க­வில்லை. எம்­மு­ட­னான எந்­த­வொரு பேச்­சு­வார்த்­தைக்கும் அரச பெருந்தோட்ட­யாக்கம் முன்வரவி ல்லை. ஆகவே இன்று திங்கட்கிழமை முதல் கண்டி எயாபார்க், நவனா கல, கந்தவத்தை, கொமனிகல, வெலி கொல, உள்ளிட்ட ஆறு  தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர் கள் தொடர்ச்சியான போராட்டங்களை தோட்டத்தொழிலா ளர்கள் முன்னெ டுக்கவுள்ளனர். இவ்விடயத்தில் தோட்த்தொழி லாளர்களுக்கு சரி யான தீர்வொன்றை பெற்றுத்தரும் வரையில்  குறித்த போராட்டம் தொட ரும் என்றார்