யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் கொழும்பில் கைது செய்து கொண்டு வரப்பட்ட தனஞ்செயனின் கைத் தொலைபேசியை தன்னிடம் ஒப்படைக்குமாறு தெல்லிப்பழையை சேர்ந்த யுவதி ஒருவர் யாழ்ப்பாணம் பொலிசாரை நாடியுள்ளார்.யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் பல வாள் வெட்டுச் சல்பவங்களுடன் தொடர்பு பட்ட குற்றச்சாட்டினில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த து. தனஞ்செயன் கொழும்பு கொட்டாஞ்சேனைப்பகுதியில் தலைமறைவாக இருந்த சமயம் யாழ்ப்பாணம் மற்றும் கொட்டாஞ்சேனைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் கொண்டு வரப்பட்டனர்.
இவ்வாறு கொண்டு வரப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் நாதவான் முன்னிலையில் ஆயர் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனஞ்சியன் குழுவினரில் தனஞ்செயனின் காதலி என தன்னை அடையாளம் செய்த ஓர் யுவதி யாழ்ப்பாணம் பொலிசாரைத் தொடர்பு கொண்டுள்ளார். இவ்வாறு தொடர்பு கொண்ட யுவதி தனஞ்செயனின் பாவனையில் இருந்த கைத் தொலைபேசியினை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ளார்.
இருப்பினும் இந்த கோரிக்கையினை ஏற்காத பொலிசார் இது சட்டத்திற்கு உட்பட்ட விடயம் குறித்த கைத்தொலைபேசி நீதி மன்றிலேயே பாரப்படுத்த முடியும். எனத் தெரிவித்துள்ளனர்.

