மன்னார் முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனைக்கு ஐனாதிபதியுடன் பேசி தீர்வு பெற்று தரப்படும் – சாள்ஸ் எம் பி

241 0
மன்னார் முள்ளிக்குளம் மக்களின் பிரச்சனையும் ஜனாதிபதியின் சந்திப்பின்போது உரையாடி தீர்வு பெற்றுத்தருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் முள்ளிக்குளம் மக்களிடம் தெரிவித்தார்.
முள்ளிக்குளம் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிலகிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி அப்பகுதி மக்களால் கவன ஈர்ப்பு போராட்டம் நடாத்தப்படுகின்றது. அவ்வாறு நடாத்தப்படும் போராட்டத்தினை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் மாவட்ட கிளைக் குழுத் தலைவர் பரஞ்சோதி உள்ளிட்ட குழுவினர்  நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடி அவர்களின் பிரச்சணை தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர்.
அவ்வாறு முள்ளிக்குளம் மக்களின் பிரச்சணை தொடர்பில் உடனடியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான  இரா.சம்பந்தனுடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தப்பட்டது. இவற்றினைக் கேட்டறிந்த எதிர்க்கட்சித் தலைவர் ரஸ்சிய நாட்டில் உள்ள ஜனாதிபதி நாடு திரும்பியதும் கேப்பாபுலவில் போராட்டம் நடாத்தும் மக்களினதும் ஏனைய போராட்டங்கள் தொடர்பாகவும சந்தித்து கலந்துரையாடி தீர்வைப்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு அந்த விடயங்கள் உரையாடும்போது மன்னார் முள்ளிக்குளம் தொடர்பிலும் உரையாடி தீர்வைப் பெற்றுக் பொடுப்பதாக வாக்குறுதியளித்துள்ளார். எனப் பதிலளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.