2023 ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் எயிட்ஸ் நோயாளர்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரிப்பு

115 0

2023ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியில் இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின்  எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

2009 ம் ஆண்டிற்கு பின்னர் 2023 ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு பகுதியிலேயே எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை  பல மடங்காக அதிகரித்துள்ளது.

தேசிய எஸ்டிடி – எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம்இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

இரண்டாவது காலாண்டு பகுதியில் 181 புதிய எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம்  காணப்பட்டுள்ளனர்.

இக்காலப்பகுதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 26 ஆண்களும் 3 பெண்களும் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் .ஏனையவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

இதேகாலாண்டு பகுதியில் எயிட்சினால் 13 உயிரிழப்புகளும் இடம்பெற்றுள்ளன.