28.08.2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்க்கப்பட்ட முடிவுகள்

142 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்  28.08.2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்  ஏற்க்கப்பட்ட   முடிவுகள்

 1.  காணி உறுதி வழங்கல்

பாரம்பரிய சுதேச வைத்தியத்தியத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் சேவையைப் பாராட்டுவதற்காக சுதேச மருத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிக்காட்டும் மருத்துவர்களின் சேவைகளை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் பிரதேச செயலகப் பிரிவில் வெதகம மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் 25 பாரம்பரிய மருத்துவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் வீதம் காணி ஒதுக்கி வழங்கப்பட்டுள்ளதுடன்இதுவரைக்கும் குறித்த காணிகளின் உரித்துக்கள் வழங்கப்படவில்லை. குறித்த காணிகள் சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளரின் பெயரில் அறுதி உறுதிக் காணிகளாகக் காணப்படுவதால்அக்காணிகளின் உரித்துக்களை பாரம்பரிய மருத்துவர்களுக்கு வழங்குவதில் தடையாக உள்ளது. குறித்த காணிகளை பாரம்பரிய மருத்துவர்களுக்கு ஒப்படைத்தல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சட்டமா அதிபரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன்அதற்கமையநடவடிக்கைகளை மேற்கொண்டு அக்காணிகளுக்கான முறையான வழங்கல் பத்திரங்களை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 1.  கருத்திட்டங்களுக்காக வழங்கல்

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை அபிவிருத்தி செய்வதற்காக தனியார்துறை முதலீட்டாளர்களுக்கு போட்டித்தன்மை அடிப்படையில் முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்காக 2020.10.19 திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுக்கமைய நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான தம்புள்ள பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 03 றூட் 17.75 பேர்ச்சர்ஸ் காணித் துண்டை விவசாய தொழிற்றுறை மற்றும் விவசாயக் களஞ்சியக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிரந்தர பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமையகுறித்த காணித்துண்டை 30 வருடங்களுக்கு Dambulla Agro Cool Holdings (Pvt) Ltdற்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

03) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

இலங்கை மின்சார சபை 2018ஆம் ஆண்டு தொடக்கம் யப்பான் மின்சக்தி நிலையத்துடன் இணைந்து பங்களிப்புடன் செயலாற்றியதுடன், 2019ஆம் ஆண்டில் தொழிநுட்ப்ப ஒத்துழைப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செயலாற்றியதற்கு அமைவாக ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒத்துழைப்புக்களின் அடிப்படையில் பல்வேறு அறிவுப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்களில் ஈடுபடுவதற்கு இயலுமாகும் வகையில் 2023ஆம் ஆண்டு தொடக்கம் தொழிநுட்ப ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இரு தரப்பும் உடன்பட்டுள்ளது. அதற்காக முன்மொழியப்பட்டுள்ள தொழிநுட்ப ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வு ஒப்பந்த வரைபு சட்டமா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அவதானிப்புக்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

 1. இலங்கையின் உபசரிப்பு

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் அமைப்பு 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,தற்போது 23 நாடுகள் அதன் உறுப்புரிமையைக் கொண்டுள்ளன. இவ் அமைப்பின் 25ஆவது முதுநிலை அதிகாரிகளின் குழுக்கூட்டம் 2023.10.09 மற்றும் 2023.10.10ஆம் திகதிகளிலும், 23ஆவது அமைச்சுப்பேரவைக் கூட்டம் 2023.10.11 திகதியிலும் கொழும்பில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அமைச்சுப் பேரவைக் கூட்டத்தில் 2023 தொடக்கம் 2025 வரையான காலப்பகுதிக்கான இந்து சமுத்திர எல்லை நாடுகளின் அமைப்புக்களின் தலைமைத்துவத்தை இலங்கை பொறுப்பேற்கவுள்ளதுடன்குறித்த காலப்பகுதியில் பிராந்திய அடிப்படையை பலப்படுத்தல்  இந்து சமுத்திரத்தின் தனித்துவத்தை வலுவூட்டல்” எனும் தொனிப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சால் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த தகவல்கள் அமைச்சரவையின் கருத்தில் கொள்ளப்பட்டது.

 1.  விநியோகத்தை பாதுகாத்தல்

லிட்ரோ எரிவாயு லங்கா கம்பனிக்கு 280,000 மெட்ரிக்தொன் திரவப் பெற்றோலிய வாயுவை விநியோகிப்பதற்காக தற்போதுள்ள ஒப்பந்தம் 2023.12.31ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. 2024 – 2025 ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய வாயு விநியோகிப்பதற்கான விலைமுறி கோரப்பட்டுள்ளது. ஆனாலும்லிட்ரோ எரிவாயு லங்கா கம்பனியின் மீள்கட்டமைப்பு செயன்முறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால்குறித்த மீள்கட்டமைப்பு செயன்முறைக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் 2023.12.31ஆம் திகதியின் பின்னர் மீள்கட்டமைப்புச் செயன்முறை பூர்த்தியாகும் வரை திரவப் பெற்றோலிய வாயு விநியோகிப்பதற்காக அரச பெறுகை வழிகாட்டியின் ஏற்பாடுகளின் பிரகாரம் மீள்பொருள் கட்டளையாக தற்போது நடைமுறையிலுள்ள ஒப்பந்தத்தின் மொத்த விநியோகத்தின் 50மூ வீதத்தை சமகால விநியோகத்தர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதிபொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05) வரிச் சட்டத்திற்கான திருத்தம்

2002ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர்பெறுமதி வரிச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக மற்றும் 2024.01.01ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலகுபடுத்தப்பட்ட சேர் பெறுமதி வரி முறைமையை இரத்துச் செய்வதற்கான 2023.06.05ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் நிதிபொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 1.  அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்தல்

1962ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க அரசிறை பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சுங்க இறக்குமதி வரித் திருத்தம் செய்வதற்கான 03 ஒழுங்குவிதிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சந்தை விலையை நிலைப்படுத்தல் மற்றும் உள்ளுர் விவசாயிகளுக்கு வசதிகளை வழங்குவதற்கான அரச கொள்கை தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் செயன்முறை தொடர்பாக 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட வர்த்தகப் பண்டங்கள் வரிச்சட்டத்தின் கீழ் 04 ஒழுங்குவிதிகள் நிதிபொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்களால் அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதிபொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 1.  ஒழுங்குவிதிகளை முன்வைத்தல்

புலம்பெயர் தொழிலாளர்கள் சட்ட ரீதியான வழிமுறைகள் மூலம் எமது நாட்டுக்கு வெளிநாட்டுப் பண அனுப்பல்களை ஊக்குவிப்பதற்கு 2022.08.01 அன்று டம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமையதொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சால் வழங்கப்பட்டுள்ள ஊக்குவிப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 107(அ) பிரிவின் கீழ்“2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பயணிகள் பயணப் பொருட்கள் (விடுவித்தல் – எமது நாட்டுக்கு உள்வரும்) ஒழுஙகுவிதிகள்நிதிபொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் அவர்களால் அரச வர்த்தமானி மூலமாக வெளியிடப்பட்டள்ளது. சுங்கக் கட்டளைகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதிபொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 1.  அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள கீழ்க்காணும் ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

•     2334 47 ஆம் இலக்க 2023.06.02 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (அபிவிருத்திக் கட்டுப்பாட்டு) ஒழுங்கு விதிகள்.

•     2339 31 ஆம் இலக்க 2023.07.07 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவர்😉 ஒழுங்கு விதிகள்.

 1.  அலுவலக சட்டமூலம்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2023.01.23 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமையசட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும்பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதிசிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11.    நுகர்வோருக்கு நியாயமான விலையில் முட்டைகளை வழங்குவதற்குத் தேவையான இறக்குமதி

உள்ளுர் சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்தும் நோக்கில் அரச வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் முட்டைகளை இறக்குமதி செய்து உள்ளுர் சந்தைக்கு விநியோகிப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமையகால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 03 இந்தியக் கம்பனிகளிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளது. குறித்த விலைமனுக்களின் அடிப்படையில் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு அரச வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் எதிர்வரும் 03 மாதங்களுக்கு 92.1 மில்லியன் முட்டைகளைக் கொள்வனவு செய்வதற்காக நிதிபொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 1.  அரச-தனியார் பங்குடமைக் கருத்திட்டம்

மேல் மாகாணத்தை உள்ளடக்கியதாக இலங்கைப் போக்குவரத்துச் சபை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்காக அரச-தனியார் பங்குடமைக் கருத்திட்டமாக 50 இலத்திரனியல் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக 2023.02.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும்,குறித்த கருத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட நன்மைகளை உறுதிப்படுத்தி குறித்த பேரூந்துகளை பயணிகள் அதிகமாகவுள்ள வீதிகளில் பொதுப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் உத்தேசிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தின் கீழ் போக்குவரத்தில் ஈடுபடுத்துகின்ற பேரூந்துகளை 200 வரை அதிகரிப்பது மிகவும் பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.அதற்கமையஉத்தேச கருத்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்படும் பேரூந்துகளின் எண்ணிக்கையை 200 வரை அதிகரிப்பதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 1.  வீசா முறைமையை இலகுபடுத்தல்

1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டம் மற்றும் அதன்கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளுக்கமைய எமது நாட்டுக்கு வருகை தருகின்ற வெளிநாட்டவருக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் வருகைதரு வீசாவதிவிட வீசா மற்றும் பயண வீசா என 03 வகையான வீசாக்கள் வழங்கப்படுகின்றன. வருகைதரு வீசா மற்றும் வதிவிட வீசா ஆகிய 02 வகையான வீசா முறைமையின் கீழ் வழங்கப்படுகின்ற வீசா வகைகளில் காணப்படுகின்ற சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டுஅதிகளவிலான வெளிநாட்டவர்களைக் கவர்ந்திழுக்கின்ற வீசா முறைகளைக் கருத்திலெடுத்துஎமது நாட்டில் நடைமுறையிலுள்ள வீசா முறையை மீண்டும் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமையசமகாலத்தில் நிலவுகின்ற வீசா முறைகளை மிகவும் இலகுபடுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 1.  அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

1907 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க காடுபேணற் கட்டளைச் சட்டத்தின் கீழ் (451 ஆம் அத்தியாயமான) விதிக்கப்பட்டுள்ள, 2346 02 ஆம் லக்க மற்றும் 2023.08.21 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வெட்டு மரம்காட்டுமர இன விதைகள் அல்லது வேறு காட்டு விளைபொருளை ஏற்றுமதி செய்தல் ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக வனசீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

15.    பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்

தற்போது 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்காக 2023.02.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருசில பிரிவுகள் தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற பல தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களைக் கருத்தில் கொண்டு அச்சட்டமூலத்திற்குத் தேவையான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமையதற்போது வரைவாக்கம் செய்யப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திருத்தங்களை உள்வாங்கி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை மீண்டும் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நீதிசிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

16.     மீண்டும் பொறுப்பேற்றல்

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட கண்டி இராசதானி காலத்திற்குரிய ஆறு தொல்பொருட்களை மீண்டும் இலங்கைக்குப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான பேச்சுவார்ததை உடன்பாடுகளை நடாத்துவதற்காக 2023.06.26 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர் நெதர்லாந்து அரசு குறித்த ஆறு தொல்பொருட்களை மீண்டும் இலங்கைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டு அரச வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. அதற்கமையகுறித்த தொல்பொருட்களை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக இருதரப்பினர்களுக்கிடையே உடன்பாடுகளைத் தெரிவிக்கின்ற சட்டரீதியான ஆவணத்திற்கு மற்றும் குறித்த தொல்பொருட்களை பௌதீக ரீதியாக எமது நாட்டுக்குக் கொண்டு வரும் வரை நெதர்லாந்தின் Rijks நூதனசாலையில் வைத்திருப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக புத்தசாசனசமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

17.     ஒப்பந்தங்களை வழங்கல்

ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் சிங்கப்பூரின் சென்கி விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை கம்பனியின் விமானங்களுக்கான எரிபொருள் விநியோகத்திற்காக மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன்அதற்காக 03 விலைமுறிகள் வீதம் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமையஅமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவாறுவிபரங்களுடன் பதிலளிப்புக்கள் வழங்கியுள்ள குறைந்த விலைகளை சமர்ப்பித்துள்ள Shell Markets (Middle East) Limited ற்கு மேற்குறிப்பிட்டுள்ள விமான நிலையங்களில் ஸ்ரீலங்கன் விமான சேவை கம்பனி விமானங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக துறைமுகங்கள்கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 

18.     சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம்

 

இந்தியாவின் புதுடில்லி மற்றும் ட்றிச் சர்வதேச விமான நிலையங்களில்சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் மற்றும் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவை கம்பனியின் விமானங்களுக்கான தரையிறக்க சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேச பொறிமுறையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கமையஅமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய குறித்த பெறுகைகளை வரிசைக்கிரமமாக கீழ்வரும் விலைமனுதாரர்களுக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள்கப்பல்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.