தேசிய செயலகத்தில் பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்களைத் தடை செய்ய நடவடிக்கை!

81 0

தேசிய செயலகத்தில் பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்களைத்  தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் அதிகம் பேசப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் டிரான் அலஸ் , நாட்டில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களை  கண்டறிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.