கொழும்பின் புறநகர் பகுதியொன்றில் வாழும் மக்களுக்கு விசேட அறிவித்தல்

75 0

கொழும்பின் புறநகர் பகுதியான ஹோமாகம பிரதேசத்தை அண்மித்த குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணியுமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

ஹோமாகம பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலையின் இரசாயன களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுவாசக் கோளாறுகளை குறைப்பதற்காகவே இந்த விசேட கோரிக்கையை அனர்த்த முகாமைத்துவ பிரிவு முன்வைத்துள்ளது.