குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் புத்த பிக்குகள் வழிபாடு!

277 0

முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் புத்த பிக்குகள் இணைந்து அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள சிங்கள மக்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய பொங்கல் நிகழ்வுகளில் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதன் அடிப்படையில், 3 பேருந்துகள், 2 இராணுவ வாகனங்களில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர், விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தமிழ் மக்களும் பொங்கல் நிகழ்விற்காக வருகை தந்தவண்ணம் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.