யாழில் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்த 56 வயது பெண்

164 0

யாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு இன்பருட்டி பகுதியில் இடம்பெற்ற நீச்சல்ப் போட்டியில் 56 வயதான பெண் ஒருவர் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்து மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.

நேற்று (17.08.2023) இடம்பெற்ற ஒரு கடல் மைல் நீச்சல்ப் போட்டியில், மற்றுமொரு 40 வயது பெண் முதலாமிடத்தையும்,  44 வயதுடைய பெண் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.

வடமராட்சி – வடக்கு இன்பருட்டி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் 67வது ஆண்டு விழாவும், காண்டீபன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் விளையாட்டுப் போட்டியும் இன்று இடம்பெற்றது.

இதில் பெண்களுக்கான ஒரு கடல் மைல் நீச்சல்ப் போட்டி இடம்பெற்றது. இதன்போதே குறித்த பெண்கள் நீந்தி முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.

 

யாழில் ஒரு கடல் மைல் தூரத்தை நீந்திக் கடந்த 56 வயது பெண் | 56 Yeras Old Women Won Price In Swiming In Jaffna

இதில் ஆண்களுக்கான நீச்சல், படகோட்டப் போட்டிகள் இடம்பெற்றன. பருத்தித்துறை- தென்னியம்மன் முனையில் இருந்து இன்பசிட்டி வரை நீச்சல்ப் போட்டி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.