கீரிமலை நகுலேஸ்வர குருக்கள் இறைவனடி சேர்ந்தார்

295 0
கீரிமலை நகுலேஸ்வர ஆலய ஆதீன கர்த்தா மஹாராஜ ஸ்ரீ கு. நகுலேஸ்வர குருக்கள் நேற்று சனிக்கிழமை (15) இரவு தனது 98ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

இவர், கீரிமலை பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தை பாதுகாப்பதில் அரும்பாடுபட்ட ஒருவர் ஆவார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்துக்கு சென்று நகுலேஸ்வர குருக்களிடம் ஆசி பெற்றமை குறிப்பிடத்தக்கது.