தலதா மாளிகை விவகாரம் ;சஜித் கண்டனம்

229 0

தலதா மாளிகைக்கு 13 மில்லியன் ரூபாய் பணத்தை கட்டணமாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை மின் கட்டணப் பற்றுச்சீட்டு அனுப்பியிருந்தமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத்தைக் கடுமையாக சாடியுள்ளார்.

அரசாங்கம் அநியாயமாக மத வழிபாட்டுத் தலங்களுக்குச் சுமை சுமத்துவதாக குறித்த அறிக்கையில் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பௌத்த விகாரைகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் சலுகை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.