பாடசாலைக் காணி சுற்றிவளைப்பில் நால்வர் கைது!

195 0
பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று (16) பதுளையில் உள்ள பாடசாலை காணி ஒன்றில் சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த இறைச்சி மடுவத்தை சுற்றிவளைத்து நான்கு மாடுகளின் இறைச்சியுடன் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த நிலையில் காணப்பட்ட 3 வயதான கன்றுக்குட்டிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த இடத்தில் சட்ட விரோதமான முறையில் கால்நடைகளை அறுத்து, நகரிலுள்ள மாட்டிறைச்சி கடைகளுக்கு இறைச்சி வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பதுளை விசேட பொலிஸ் பணியகத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், பதுளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.