ரயில் பாதை புனரமைப்பு பணிகளின்போது நீக்கப்பட்ட தண்டவாளங்களை கொண்டு சென்ற நபர்கள், யாழ். ராணி ரயிலில் மோதியதையடுத்து இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தெரியவந்ததாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளனர்.
இச்சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ரயில் தண்டவாளங்களை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட எரிவாயு கட்டர், ஒட்சிசன் தாங்கி மற்றும் 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் என்பனவும் கைப்பற்றப்பட்டதாக அனுர பிரேமரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

