பேரணிக்குள் பேரூந்து பாய்ந்து பயங்கர விபத்து – 40 பேர் பலி

236 0
அப்போது, ஹைத்தி நாட்டின் தலைநகரான போர்ச் அவ் பிரின்ஸ் பகுதியில் இருந்து கேப் ஹைட்டியென் நகரை நோக்கி வந்த ஒரு பேரூந்து கொனாய்வேஸ் என்ற இடத்தில் சாலை ஓரமாக நடந்து சென்ற சிலர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார் சிலர் காயம் அடைந்தனர்.

பொதுமக்களிடம் பிடிபட்டால் நம்மை அடித்தே கொன்று விடுவார்கள் என்று பயந்தவாறு, விபத்தை ஏற்படுத்திய அந்த சாரதி பேரூந்தை நிறுத்தாமல் மேலும் அதிக வேகமாக ஓட்டியவாறு சம்பவ இடத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் ஈஸ்டர் பேரணி நடக்கும் இடத்தின் வழியாக தப்பிச் செல்ல முயன்றார்.

இந்த பதற்றத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் பேரணியாக சென்ற கூட்டத்தின்மீது பேரூந்தை மோத விட்டார்.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 34 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இந்த விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியால் ஆவேசம் அடைந்து பேரணியில் வந்த பலர் பேரூந்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் வழிப்போக்கர்களில் சிலர் காயம் அடைந்ததாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.