யானைகளை எவ்வாறு கையாள்வது எப்படி என்ற தொழில்முறை பயிற்சி இல்லாததன் காரணமாகவே சக்சுரின் யானையை தாய்லாந்திற்கு மீள வழங்கவேண்டிய நிலையேற்பட்டது என பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்தஆலயமொன்றில் வைக்கப்பட்டிருந்தவேளை மோசமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் யானை அதன் சொந்தநாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்பதை கேள்விப்படுவது கவலையளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் பௌத்தகலாச்சாரத்தினால் வளம் பெற்ற நாடு ஆனால் யானையை உரிய முறையில் பராமரிக்க தவறிவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
யானையை திருப்பியனுப்புவதில் ஈடுபட்ட தாய்லாந்து அரசாங்கம் மற்றும் அதிகாரிகளிற்கு அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
யானையை பராமரிப்பது குறித்த தொழில்சார் பயிற்சி இல்லாததன் காரணமாகவே பல யானைகள் துன்புறுகின்றன செல்வந்தவர்கள் நிலமேக்கள் சிலவீடுகளில் உள்ள யானைகள் மாத்திரம் உரிய பராமரிப்பை பெறுகின்றன பெரும்பாலன யானைகள் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த யானைகள் வருடத்திற்கு ஒருமுறை ஆலயதிருவிழாக்களில் பயன்படுத்தப்படுகின்றன ஏனைய நாட்களில் அவைகள் ஹோட்டல்கள் சுற்றுலாத்தலங்களில் காணப்படுகின்றன அந்நிய செலாவணியை உழைப்பதற்காக அதனை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யானைகளை ஆலயங்களிற்கு வழங்குவதை நிறுத்தவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

