கேகாலையில் பலா மரம் முறிந்து பாடசாலைக் கட்டிடத்தில் வீழ்ந்ததில் 8 மாணவர்கள் காயம்

139 0
கேகாலை எக்கிரியாகலை கனிஷ்ட கல்லூரியின் மைதானத்தில் உள்ள பலா மரமொன்று பலத்த காற்றுக் காரணமாக வகுப்பறைக்  கட்டிடம் ஒன்றின் மீது வீழ்ந்ததில் 8  மாணவர்கள் காயமடைந்து கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

வகுப்பறைக் கட்டிடத்தின் மீது வீழ்ந்த பலா மரம் மேற்கூரையில் இருந்த ஓடுகளை உடைத்ததால் 4 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின்  தலைகளில்  ஓடுகள் வீழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காயமடைந்த எட்டுப் பேரும் முச்சக்கரவண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டு கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.