கதிர்காமத்தில் உள்ள விஹாரை ஒன்றுக்கு தானமாக வழங்கப்பட்ட யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், கண்டியில் உள்ள விஹாரைக்கு தானமாக வழங்கப்பட்ட யானை வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளதாக தாய்லாந்து ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், கதிர்காமத்திலுள்ள விஹாரைக்கு தானமாக அளிக்கப்பட்ட யானையின் உடல்நிலையை பரிசோதிக்க தூதுக்குழுவினருக்கு நேரம் எடுத்துக் கொண்டதாக பிபிஎஸ் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
1979 ஆம் ஆண்டு தாய்லாந்து இந்த யானையை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதாகவும் அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கண்டி விஹாரைக்கு வழங்கப்பட்ட யானை சுகாதார காரணங்களுக்காக வேறு இடத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக விஹாரையின் நிர்வாகத்தினர் குறித்த குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

