ஜம்மு – காஷ்மீரில் விவசாயிகளுக்கு சிறப்பு திட்டம்

136 0
2019 இடைக்கால வரவு செலவு திட்டத்தில், ஏழை விவசாயிகளுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் நோக்கில், விவசாயிகளுக்காக, வருமான ஆதரவுத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டமானது விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் நேரடி பண ஆதரவை வழங்குகிறது.

இத்திட்டத்தின் கீழ், இரண்டு ஹெக்டேருக்கு குறைவான நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, தலா, 2,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளில், அவர்களது கணக்குகளில் பணம் வைப்பிலிடப்படும் என வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

உதம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பாக தேப்ரா பஞ்சாயத்தைச் சேர்ந்த விவசாயிகள், குறைந்த வருமானம் உள்ளதால், இந்த திட்டத்தின் கீழ் முறையான விதைகளை வாங்கி விவசாய நடவடிக்கைளில் ஈடுப்பட முடிகிறது. மாவட்டத்தில் உள்ள அறுபதாயிரத்து நானூற்று எண்பத்தொன்பது விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெப்ரா கிராமம் அதன் விவசாய நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை சந்தித்து வருகிறது. இயற்கை காய்கறிகளுக்கான வளர்ந்து வரும் தேவைக்கு ஏற்ப, விவசாயிகள் இயற்கை விவசாய முறைகளின் பலன்களை அறுவடை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.