அதிநவீன வசதியைப் பயன்படுத்தி, இந்திய கடற்படையின் கமாண்டோக்கள் உள்ளடக்கிய சிறப்பு குழுவின் பல்வேறு கடல் நிலைகளில் மீட்புப் பயிற்சிகளை முன்னெடுத்தனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்திக்குறிப்பின் பிரகாரம், மருத்துவத் தேவைகளின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வெவ்வேறு விமானங்களைப் பற்றி அறிந்து கொள்வது பற்றிய சுருக்கத்தை உள்ளடக்கிய பரந்துப்பட்ட மீட்பு குழு பயிற்சியாக இது அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
இந்திய கடற்படை மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கிய உபகரணங்களும் இந்த பயிற்சி திட்டத்தில் உள்ளவாங்கப்பட்டிருந்தன.
இஸ்ரோவின் விண்வெளி விமான மையத்தின் இயக்குனர் டாக்டர் மோகன், பயிற்சியில் ஈடுப்பட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

